ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆ.ராசா, தாயநிதி மாறனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது உறுதி: ஆம் ஆத்மி

தமிழகத்தில் திமுக வேட்பாளர்கள் ஆ.ராசாஇ தயாநிதி மாறனை எதிர்த்து கட்டாயமாக வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஆம்

News image
Updated On :12 மார்ச் 2014, 12:44 pm

வேல்முருகன்

தமிழகத்தில் திமுக வேட்பாளர்கள் ஆ.ராசாஇ தயாநிதி மாறனை எதிர்த்து கட்டாயமாக வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு பிரசார குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண் குமார் கூறுகையில்:

 ஊழல் வேட்பாளர்களை எதித்து எங்கள் கட்சி எல்லா இடங்களிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நீலகரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராசாவை எதித்தும், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறனை எதிர்த்தும் எங்கள் கட்சி கண்டிப்பாக வேட்பாளரை நிறுத்தும்.

ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ முதல் வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும்

தமிழகத்தில் 3 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். அணு உலைக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.என்றார்.

அப்போது உதயகுமார் மீது ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில் அவருக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், உதயக்குமார் கைது செய்யப்பட்டாலும் சிறையில் இருந்தபடி வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிடுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.