இளம்பெண் எரித்துக் கொலை: கணவர், மாமியாருக்கு ஆயுள் சிறை-சேலம் நீதிமன்றம் தீர்ப்பு
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம் பெண்ணை எரித்துக் கொலை செய்த அவரது கணவர், மாமியாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை அளித்து சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை


சேலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம் பெண்ணை எரித்துக் கொலை செய்த அவரது கணவர், மாமியாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை அளித்து சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ரமேஷ் (33). இவருக்கும் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுகந்தி (23) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணத்தின்போது ரமேஷூக்கு வரதட்சிணையாக 10 சவரன் நகையை சுகந்தியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதை சுகந்திக்கு தெரியாமல் அடமானம் வைத்து பணத்தை செலவு செய்த ரமேஷ், அதேபோல் கவரிங் நகையை வாங்கி வீட்டில் வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் சுகந்திக்கு தெரிய வந்ததில் இருந்து தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சுகந்தியிடம் கூடுதலாக வரதட்சிணை பெற்று வரும்படி ரமேஷூம் அவரது தாயார் அஞ்சலையும் கொடுப்படுத்தி வந்ததால், இருவர் மீதும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் சுகந்தி புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 21.9.2009 அன்று வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த சுகந்தியின் மீது ரமேஷூம், அஞ்சலையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராஜசேகர், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ரமேஷ், அஞ்சலை இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...