திருச்சி வாத்தலை அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
திருச்சி மாவட்டம் திருவாசி அருகே இன்று காலை ஆட்டோவும் அரசு பஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.


திருச்சி மாவட்டம் திருவாசி அருகே இன்று காலை ஆட்டோவும் அரசு பஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.
இதுகுறித்து போலீஸ்தரபில் கூறப்படுவதாவது:- திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயிலை சேர்ந்த கந்தன் மகன் திணேஷ்குமார் 27 இவர் ஆட்டோ ஒட்டுநர். அதேப்பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பாலு 28 இருவரும் இன்று அதிகாலை வாத்தலை அருகே உள்ள கிளிய நல்லூருக்கு ஆட்டோவில் சென்றனர்.
திருவாசி அருகே சென்ற போது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியாகினர்.
இதுகுறித்து வாத்தலை போலீஸார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...