சிதம்பரம் அருகே சாலைவிபத்தில் சென்னை ஐடி நிறுவன ஊழியர்கள் இருவர் சாவு
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த மனோஜ் (26), அருண்கீர்த்தி (27) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து


சிதம்பரம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் இறந்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த மனோஜ் (26), அருண்கீர்த்தி (27) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இவர்கள் இருவரும் திங்கள்கிழமை மதியம் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது சிதம்பரம் வல்லம்படுகை வில்லியம்ஸ் பள்ளி அருகே எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...