நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையை மத்திய உள்துறை அமைச்சகம் வாபல் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து மார்ச் 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவது என பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்க பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்க பேரவை கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் பேரவை கடலூர் மாவட்டச் செயலாளர் வீர.வன்னியவேங்கன் வரவேற்றார். மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் கோதண்டபாணி, என்எல்சி ஒபிசி தொழிற்சங்கத் தலைவர் குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் பேரவை அகில இந்திய பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா பங்கேற்று பேசினார்.
தீர்மானங்கள்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், தொழில் பாதுகாப்பு படையினரால் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்

கேட்ட காமராஜர்! மறுத்த தீர்த்தகிரியார்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

