எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

100 சதவீத வாக்குப் பதிவு வலியுறுத்தி காரைக்காலில் உங்கள் குரல் நிகழ்ச்சி

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு வலியுறுத்தி அகில இந்திய வானொலி மூலம் உங்கள் குரல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

News image
Updated On :20 மார்ச் 2014, 10:54 am

செல்வ முத்துகுமாரசாமி

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு வலியுறுத்தி அகில இந்திய வானொலி மூலம் உங்கள் குரல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி காரைக்காலில் 18 வயது பூர்த்தியடைந்து புதிதாக வாக்காளர்களாக உருவாகியுள்ளோரை, 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திவரும் காரைக்கால் பாலிடெக்னிக் குழுவினர், காரைக்கால் வானொலி நிலையம் மூலம் கல்லூரி மாணவ மாணவிகளிடம் வாக்களிப்பு குறித்த  கருத்து கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாணவர்களிடம் கேட்கப்படும் கருத்துகள் வானொலியில் ஒலிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அ.முத்தம்மா தொடங்கிவைத்தார். ஜனநாயகம் வலுப்பட, தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு அவசியம். குறிப்பாக புதிதாக வாக்காளராக சேர்ந்துள்ள கல்லூரி மாணவ மாணவிகள் தவறாது வாக்குப் பதிவு  செய்து, ஜனநாயத்தை வலிமையுடையதாக ஆக்கவேண்டும். நாடு உங்களின் வலிமைமிக்க வாக்கை எதிர்பார்த்திருக்கிறது என்றார்.

இதைத் தொடர்ந்து அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. ஜனநாயகம், வாக்களிக்கும் முறை, நோட்டோ குறித்து மாணவிகள் பல்வேறு கருத்துகளை கூறியதோடு, தவறாது தேர்தலில் வாக்களிப்போம் என  உறுதியளித்தனர். காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.சந்தனசாமி கூறும்போது, தேர்தலில் வாக்களிப்பின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவிட்டது. கண்டிப்பாக காரைக்காலில் வாக்கு சதவீதம் அதிகமாகவே இருக்கும், புதிய வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.