நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் கல்லூரி மாணவர்களிடம் விடுதலைச் சிறுத்தையினர் தேர்தல் பிரசாரம்

சிதம்பரத்தில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை

News image
Updated On :21 மார்ச் 2014, 12:56 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருக்கு ஆதரவு கேட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், அருள்வேல், கிருபா ஆகியோர் தலைமையிலான சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ம.செ.சிந்தனைச்செல்வன், தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு ஆகியோர் பங்கேற்று, திருமாவளவனுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அரசியல் சூழல் குறித்தும் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, தமிழ்வளவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.