47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீர்காழியில் பாமக பிரசார பொதுக் கூட்ட மேடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாகை மாவட்டம், சீர்காழியில் பாமக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்ற மேடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது,

News image
Updated On :21 மார்ச் 2014, 2:47 am

சங்கர்

நாகை மாவட்டம், சீர்காழியில் பாமக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்ற மேடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது,

அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம், சீர்காழி பழையப் பேருந்து நிலையம் அருகே, பாமக- பாஜக கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் க. அகோரத்து வாக்கு சேகரிக்கும் பாமக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு மற்றும் பாமக, பாஜக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம், இரவு 9.50 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மேடையிலிருந்து வெளியேறிய நிலையில், பொதுக்கூட்ட மேடையைப் பிரிக்கும் பணி இரவு 10 மணிக்கு மேலாகத் தொடங்கி நடைபெற்றது.

இந்த நிலையில், இரவு சுமார் 10.45 மணிக்கு அந்த வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்ம நபர்கள், பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டிலில் தீ வைத்து மேடையின் மீது வீசி விட்டுத் தலைமறைவாகினர்.

இதில், மேடை விரிப்பில் தீ பரவி சுமார் 4 அடி உயரம் தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியிலிருந்த பாமக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்தனர். சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.