கடல்நீர் உட்புகாமல் தடுக்க கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் தடுப்பணைகள் அமைக்கவும், பரங்கிப்பேட்டை துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்தவும், சிதம்பரம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கவும், புதுச்சேரியிலிருந்து சிதம்பரம் வரை உள்ள பக்கிங்காம் கால்வாயை தூர்வாரவும், நெய்வேலியில் முதலை பண்ணை அமைத்து, மக்களை அச்சுறுத்தி வரும் முதலைகளை அங்கு கொண்டு விடவும் நடவடிக்கை எடுப்பேன் என டாக்டர் ப.வள்ளல்பெருமான் தெரிவித்தார். பேட்டியின் போது முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிஸ் கமிட்டி துணைத்தலைவர் செந்தில்குமார், பாரதியார் வங்கி இயக்குநர் துரை.பாலசந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.