நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விஸ்வகர்ம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே ஆதரவு: விஸ்வகர்ம சங்கம் முடிவு

விஸ்வகர்ம சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க

News image
Updated On :22 மார்ச் 2014, 10:47 am

ஜி.சுந்தரராஜன்

விஸ்வகர்ம சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க விஸ்வகர்ம விருது வழங்கும் விழா சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் பி.முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் எம்.கோவிந்தராஜ், சி.ஏகாம்பரம், ஆர்.பாவாடைபத்தர், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க மாநில செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் ஜி.சேகரின் சமூக சேவையை பாராட்டி விஸ்வகர்ம சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் ஏ.நடராஜன், எஸ்.மோகன், எஸ்.ராமலிங்கம், எஸ்.பாலசுப்பிரமணியன், கே.சி.ராஜாராம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.

விழாவில் விஸ்வகர்ம சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், விஸ்வகர்ம சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேசிய கைவினை கலைஞர்கள் நலவாரியம், தேசிய பொற்கொல்லர் நல வாரியம், தேசிய சிற்ப கலா அகாதெமி ஆகியவகளை மத்தியஅரசு ஏற்படுத்தி தர வேண்டும், திருட்டு நகை மீட்பு சட்டவிதிகளை திருத்தம் செய்ய வேண்டும், வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களாக விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்தவரை பொற்கொல்லர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.