முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா சட்டப்பேரவையில் ஏறக்குறைய 110 விதிகளின் கீழ் 300 அறிக்கைகளை படித்துள்ளார். 110 விதியை எதற்கு பயன்படுத்த வேண்டுமென்றால், ஏதாவது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டால், நடக்கக்கூடாது சம்பவம் நடைபெற்றாலோ, அதுகுறித்து 110 விதியை பற்றி முதல்வரோ அல்லது அமைச்சர்களோ பேசலாம். அப்போது யாரும் குறுக்கே பேசக்கூடாது என்பதுதான் அதன் சிறப்பு அம்சம். கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்த போது குறைந்தது 20 அல்லது 25 முறைதான் பயன்படுத்தியுள்ளார். எம்ஜிஆர், காமராஜர், பக்தவக்சலம், அண்ணா முதல்வராக இருந்திருக்கிறார். தேவைப்படும் போதுதான் 110 விதியை பயன்படுத்தி அறிக்கை படித்துள்ளனர். ஆனால் ஜெயலலிதா நிதிநிலை அறிக்கையில் சொல்லக்கூடியதை 110 விதியின் கீழ் படிக்கிறார். ஆளுநர் உரையில் உள்ளது பற்றி 110 விதியின் கீழ் படிக்கிறார். நேரமில்லா நேரம் திட்டத்தையே மாற்றி, யாரும் குறுக்கே பேசக்கூடாது. சட்டப்பேரவையில் முதல்வரை புகழ்ந்து பேசினால்தான் பேச முடியும். குறையே சொல்லக்கூடாது. அப்படியே மீறி பேசினால் வெளியேற்றி விடுவார்கள். நாங்கள் மறுத்தால், தூக்கிவிட்டு வந்து வெளியே போட்டுவிடுவார்கள்.