47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்காளர்களுக்கு வணக்கம் தெரிவிக்காத வணங்காமுடி வேட்பாளராக வலம் வருகிறார் மயிலாடுதுறை ஹைதர் அலி

வாக்கு வேட்டைக்காக வாக்காளர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களின் மத்தியில், வாக்காளர்களுக்கு வணக்கம் தெரிவிக்காத வணங்காமுடி  வேட்பாளராக வலம் வருகிறார்

News image
Updated On :24 மார்ச் 2014, 7:07 am

சங்கர்

வாக்கு வேட்டைக்காக வாக்காளர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களின் மத்தியில், வாக்காளர்களுக்கு வணக்கம் தெரிவிக்காத வணங்காமுடி  வேட்பாளராக வலம் வருகிறார்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் செ. ஹைதர் அலி. ஜெயலலிதா, ஸ்டாலின் போன்ற முக்கியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் போது, தொடர்புடைய வேட்பாளர்கள் கை வலியையும் பொருள்படுத்தாமல் மணிக் கணக்கில் கைக்கூப்பி நிற்கும் நிலையில், வேட்பாளர் ஹைதர் அலி வாக்காளர்களுக்கு மறந்தும் வணக்கம் வைப்பதில்லை. 

வாக்காளர்களை நோக்கி சலாம் வைப்பது, பணிவைத் தெரிவிக்கும் வகையில் நெஞ்சில் கையை வைத்துக் கொள்வது, சோனியா காந்தி போல மக்கள் கூட்டத்தைப் பார்த்து கை அசைப்பது போன்ற செய்கைகளை மட்டுமே செய்து வருகிறார். இறைவனைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்ற இஸ்லாம் கோட்பாட்டின் மீது அவர் கொண்ட தீவிரப்பற்றே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது, கைக்கூப்பி வணங்கும் வழக்கம் எங்களுக்குக் கிடையாது. இதே பாணியில் வாக்கு சேகரித்துத் தான்  ராமநாதபுரம், ஆம்பூர்  தொகுதிகளில் வெற்றிப்பெற்றோம். எதற்காகவும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.