சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாக்குறுதிகளை காலக்கெடுவுடன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்: சிந்தனை அரங்கம் வலியுறுத்தல்

அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், வெற்றி பெற்ற ட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் காலக்கெடுவுடன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என சிதம்பரத்தில் சிந்தனை அரங்கக் கூட்டத்தில் தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.

Updated On :24 மார்ச் 2014, 8:35 am

அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், வெற்றி பெற்ற ட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் காலக்கெடுவுடன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என சிதம்பரத்தில் சிந்தனை அரங்கக் கூட்டத்தில் தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.

சிதம்பரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, கல்வியாளர்கள் பங்கேற்ற சிந்தனை அரங்கக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்எல்சி சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கல்வியாளர்கள் டி.சந்திரசேகரன், பிச்சமுத்து, அன்பானந்தம், பேராசிரியர் வணங்காமுடி மற்றும் பல்கலைக்கழகம், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசியல் கட்சிகளில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளை நிர்பந்தம் அளிக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்; ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை காலக்கெடுவிற்குள் நிறைவேற்றாத கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிறைவேற்ற முடியாத கவர்ச்சியான பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றாமல் இருக்க அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் தேவை; பதிவு செய்யப்படும் தேர்தல் வழக்குகள் 3 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் முடிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்; தேர்ந்தெடுக்கப்படும் அரிசியல் வேட்பாளர் இறந்து விட்டால், அந்த இடத்தில் அதே கட்சியினால் நியமிக்கப்படும் பிரதிநிதியை உறுப்பினராக செயலாற்ற அனுமதிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்; சுயேச்சை வேட்பாளர் இறந்துவிட்டால், அவருக்கு அடுத்து வாக்குகளை பெற்ற வேட்பாளரை, உடனடியாக அந்த காலியிடத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வீண்கால விரயம், தாமதம், நிர்வாக செலும் குறையும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.