அதிமுகவிற்கு கடலூர் மாவட்ட குலாலர் நலச்சங்கம் ஆதரவு!
சிதம்பரம் போல்நாராயணன்தெரு குலாலர் மடத்தில் கடலூர் மாவட்ட குலாலர் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டாக்டர் ஆர்.சிவனேசன் தலைமை


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு கடலூர் மாவட்ட குலாலர் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிதம்பரம் போல்நாராயணன்தெரு குலாலர் மடத்தில் கடலூர் மாவட்ட குலாலர் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டாக்டர் ஆர்.சிவனேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சந்தானம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜா வரவேர்றார். நிர்வாகிகள் ஆர்.ராஜஜோதி, கிருஷ்ணமூர்த்தி, குமரேசன், கலியபெருமாள், கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனரக். கே.பாலமுருகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வருவதற்காக அதிமுகவை ஆதரிப்பது, கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட குலாலர் சமூகத்திற்கு (மண்பாண்ட தொழிலாளர்களுக்கு) உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் மழை, புயல், வெள்ளக் காலங்களில் குலாலர் சமூகத்திற்கு ரூ.4 ஆயிரம் அளிப்பது என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களை, மக்களிடம் பிரசாரம் மேற்கொள்வது குறித்து சேத்தியாத்தோப்பில் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி குலாலர் நலச்சங்க செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...