சிதம்பரத்தில் சிறுபாலம் உள்வாங்கியதில் லாரி கவிழ்ந்தது: மூவர் காயம்
சிதம்பரம் முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம் மெயின் ரோட்டில் செவ்வாய்க்கிழமை காலை கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே வந்தது. அப்போது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த


சிதம்பரம் நகரில் சாலையில் உள்ள சிறுபாலம் உடைந்து உள்வாங்கியதால், ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த மூவர் படுகாயம் அடைந்தனர்.
சிதம்பரம் முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம் மெயின் ரோட்டில் செவ்வாய்க்கிழமை காலை கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே வந்தது. அப்போது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலம் உடைந்து உள் வாங்கியதில், சக்கரம் அதில் சிக்கி லாரி திடீரென கவிழுந்தது. அப்போது சாலையோரம் நின்றிருந்த எம்.கே.தோட்டத்தைச் சேர்ந்த நிலவழகன் (56), நேதாஜி (44), பாலூத்துங்கரை சிவகுரு (25) ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர். இதில் நிலவழகனுக்கு கால்முறிவு ஏற்பட்டது. மூவரும் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...