நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருநங்கைகளுக்கும் தகுந்த இடம் வழங்கப்பட வேண்டும்: திருநங்கை கல்கி சுப்ரமணியம்

ஆண், பெண் இருபாலருக்கு வழங்கப்படும் இடம் போல், திருநங்கைகளுக்கும் தகுந்த இடம் வழங்கப்பட வேண்டும் என சகோதரி பவுன்டேஷன் நிறுவனரும், நடிகையுமான திருநங்கை கல்கி சுப்ரமணியம்

News image
Updated On :28 மார்ச் 2014, 12:25 pm

ஜி.சுந்தரராஜன்

ஆண், பெண் இருபாலருக்கு வழங்கப்படும் இடம் போல், திருநங்கைகளுக்கும் தகுந்த இடம் வழங்கப்பட வேண்டும் என சகோதரி பவுன்டேஷன் நிறுவனரும், நடிகையுமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக அரசியல் அறிவியல் துறை சார்பில் 'திருநங்கைகளின் உரிமைகள் மீதா பிரச்சனைகள் மற்றும் போக்குகள்' என்ற தலைப்பிலான இருநாள் தேசிய கருத்தரங்கு மார்ச் 28-ம் தேதி தொடங்கியது.

தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் 'திருநங்கைகளை மனித தனத்தோடு நடத்த வேண்டும். திருநங்கைகள் தங்களது உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் வண்ணம் தக்க தீர்வுகளை இந்த கருத்தரங்கம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

சகோசரி பவுன்டேஷன் நிறுவனரும், நடிகையுமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் 'திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாடு சமூகத்தில் உள்ளது. எனவே அவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கு வழங்கப்படும் இடம் போல், தகுந்த இடம் வழங்கப்பட வேண்டும்' என்றார்.

மனித உரிமைகள் ஆர்வலரும், திருநங்கைகள் உரிமை ஆர்வலருமான திருநங்கை ரோஸ் வெங்கடேசன்ராணி தனது சிறப்புரையில் 'திருநங்கைகளுக்கு இயற்கைச் சட்டத்தின் அடிப்படையில் தகுந்த நீதி வழங்கப்பட வேண்டும்' என்றார். அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் தெ.தேவநாதன் வரவேற்றார். முனைவர் சி.சுப்ரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் முனைவர் டி.ஜோதிராமலிங்கம் நன்றி கூறினார். கருத்தரங்கில் பாரதி கண்ணம்மா, அமோகா, குணவதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.