நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தூய்மையான எண்ணங்கள் மனிதனை வளர்த்தெடுக்கின்றன: பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்

சித்தர்கள் அருளைப் பெற மனிதன் தூய்மையான எண்ணங்களை கொண்டவராய் இருக்க வேண்டும். தூய்மையான எண்ணங்கள் மனிதனை வளர்த்தெடுக்கின்றன என பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய

News image
Updated On :28 மார்ச் 2014, 2:37 pm

ஜி.சுந்தரராஜன்

சித்தர்கள் அருளைப் பெற மனிதன் தூய்மையான எண்ணங்களை கொண்டவராய் இருக்க வேண்டும். தூய்மையான எண்ணங்கள் மனிதனை வளர்த்தெடுக்கின்றன என பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக தமிழ்த்துறை சார்பில் சித்தர் இலக்கியங்களில் வாழ்வியல் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ந.வெங்கடேசன் தலைமை வரவேற்றுப் பேசுகையில் இக்கருத்தரங்கின் 365க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 10 ஆய்வுக்கோவை நூல்களாக அச்சிடப்பட்டுள்ளது இமாலயச் சாதனையாகும் என்றார்.

விழாவில் பதிவாளர் ந.பஞ்சநதம் தலைமை வகித்து கருத்தரங்க ஆய்வுக்கோவை நூல்களை வெளியிட்டுப் பேசினார். அவர் பேசுகையில் சித்தர்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அழிவு கிடையாது. ஒவ்வொரு மனிதனின் உள்ளமே இறைவன், உடலே இறைவன் வாழக்கூடிய ஆலயமாகும். மனிதன் தன்னை அறிந்தாலே இந்த சமூகம் மேன்மையுறும் என சித்தர்கள் வலியுறுத்துள்ளதை குறிப்பிட்டார்.

தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ராமசந்திரசேகரன் முன்னிலை வகித்துப்பேசுகையில் சித்தர்கள் தமிழ் இலக்கியத்திற்கு பல தொண்டுகளை புரிந்துள்ளனர் என்றார்.திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியது: சித்தர்கள் மானுடம் காக்கும் வகையில் பல மருந்துகளை கண்டறிந்து, அதனை மக்கள் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கியுள்ளனர். மனிதர்கள் யாரும் எவ்வித நோய்களுக்கு இன்றி இன்பமாய் வாழ்ந்திட வேண்டும், மனிதர்கள் இறைவனை அறிந்து வணங்கிட வேண்டும். இறைவன் ஒவ்வொரு மனிதன் உள்ளும் இருக்கிறார். இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் தெரிவித்தார்.

இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் வாழ்த்துரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் வ.கணபதிராமன் நன்றி கூறினார். கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முனைவர் அரங்க.அன்பில்நாதன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.உதயசந்திரன், துணை இயக்குநர்கள் ராஜேஷ்குமார், சீனுவாசன், வணிகவியல் துறைத்தலைவர் விஜயராணி, மக்கள்-தொடர்பியல் துறைத் தலைவர் ரவிப்பிரகாஷ், அரசியல் அறிவியல் துறைத் தலைவர் தேவநாதன், முன்னாள் தமிழ்ப்புல முதல்வர் கணேசன், முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் ராஜவன்னியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.