தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டத்தை காங்கிரஸ் அரசு மோசடியாக நிறைவேற்றியுள்ளது: பாஜக

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டத்தை மோசடியாக நிறைவேற்றியுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அக் கட்சியின்

News image
Updated On :29 மார்ச் 2014, 1:22 pm

யுகன்

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டத்தை மோசடியாக நிறைவேற்றியுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அக் கட்சியின் சிவகங்கைத் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா புகார் தெரிவித்துள்ளார். மானாமதுரையில் தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா கட்சி வலுவான கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. மோடி பிரதமராக வர வேண்டும் நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து வருகின்றன. கடனில் இருந்த குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சியில் கடன்கள் அடைக்கப்பட்டு அந்த மாநிலம் தற்போது உபரி வருமானம் வைத்துள்ளது.இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட வேண்டும்.  நரேந்திரமோடியின் பொருளாதார அறிவை போஸ்டல் ஸ்டாம்ப் பின்புறம் எழுதிவிடலாம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அகம்பாவத்தின் உச்சமாக பேசுகிறார்.

இவரது பொருளாதாரக் கொள்கையால்தான் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விலைவாசி உயர்ந்துள்ளது.காங்கிரஸ் கூட்டணி  அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டத்தில் கடனுக்காக எந்த ஈடும் கேட்கக்கூடாது என விதி இருந்தாலும் நாடு முழுவதும் மாணவர்களிடம் ஈடு கேட்ட பின்னரே கல்விக் கடன் வழங்கப்படுகிறது. தற்போது கல்விக்காக சில லட்சம் கடன் வாங்கிய மாணவர்களுக்கு அவர்களது படிப்பு காலம் முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வருவதற்குள் அந்தக் கடன் வட்டியுடன் பல லட்சமாக உயர்ந்து வங்களிருந்து கடன் பெற்ற மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

மாணவர்களின் பெற்றோர் சொத்துக்குளை விற்று பிள்ளைகளின் கல்விக்கடனை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமைச்சர் சிதம்பரம் சிவகங்கைத் தொகுதியில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ள 19 ஆயிரம் மாணவர்களுக்கும் அந்தந்த வங்கிகளிலிருந்து முகவரி பெற்று தனது மகனுக்கு வாக்களிக்கும்படி கேட்டு கடிதம் அனுப்பி வருகிறார். இது அரசியல் மோசடித்தனமாகும். இந்த நடவடிக்கை வாக்களிக்க மாணவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததுபோல் உள்ளது. சிவகங்கைத் தொகுதி சிதம்பரத்திடம் 30 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிறது இதை மீட்க வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலைத் திட்டத்தில் சீர்திருத்தம் செய்து தணிக்கைக்கு கொண்டு வந்து தொடர்ந்து நிறைவேற்றுவதோடு விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தில் அத்யாவசிய மற்றும் உணவுப் பொருள்களுக்கு தடைவிதித்து விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படுவதோடு நதிகள் இணைப்பு கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்குள் நதிகள் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும். சிவகங்கைத் தொகுதியில் கிராமங்களை ஒன்றினைத்து ஒரு புதிய நகரம் உருவாக்கப்படும். இந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட தேர்தலில் வாக்காளர்களை தேசிய ஜனநாயக் கூட்டணிக்  கட்சியினர் சிவகங்கைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்க தேர்தல் பணி செய்ய வேண்டும் என்றார்.

இக் கூட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.