47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசியல்வாதிகளுக்குத் தடை விதித்து கிராம மக்கள் அறிவிப்பு  

பசுமை வீடுகள் கட்டித் தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என அண்மையில் கோரிக்கை மனு அளித்த அகிலாண்டபுரம் கிராம மக்கள், அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டுத் தங்கள் கிராமத்துக்கு வர வேண்டாம் என அறிவிப்புப் பலகை அமைத்துள்ளனர்.

News image
Updated On :31 மார்ச் 2014, 2:02 am

சங்கர்

பசுமை வீடுகள் கட்டித் தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என அண்மையில் கோரிக்கை மனு அளித்த அகிலாண்டபுரம் கிராம மக்கள், அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டுத் தங்கள் கிராமத்துக்கு வர வேண்டாம் என அறிவிப்புப் பலகை அமைத்துள்ளனர்.

 திருமருகல் ஊராட்சி ஒன்றியம்,  அகிலாண்டபுரம் பூதங்குடி கிராமத்தில் கடந்த 42 ஆண்டுகளாக 100 குடும்பத்தினர், ஆவராணி புதுச்சேரி ஶ்ரீ நடேஷ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருவதாகவும், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழும் இப்பகுதி மக்களுக்குப் பட்டாவுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 27-ம் தேதி நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடிப்படை உரிமைகள் இல்லாமல் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கு ஆர்வம் காட்டாத அரசியல் வாதிகள், எங்கள் ஊருக்குள் வர வேண்டாம். எங்கள் வாக்கு உங்களுக்கு இல்லை. ஏன்? யாருக்குமேயில்லை. 

தேர்தலைப் புறக்கணிப்போம் என அச்சிடப்பட்ட அறிவிப்புப் பலகை அகிலாண்டபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், அகிலாண்டபுரத்தில் உள்ள வீடுகளில் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தும் வகையில், கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.