47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கீழையூர் அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

நாகை மாவட்டம், கீழையூர், பிரதாபராமபுரம் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் நாகராஜ் என்ற தங்கராஜ்(28). பிரதாபராமபுரம், தச்சர் தெருவைச் சேர்ந்த நல்லப்பன் மகன் பாலாஜி என்ற பாலச்சந்திரன்

News image
Updated On :5 மே 2014, 1:25 pm

சங்கர்

நாகை மாவட்டம்,  கீழையூர் அருகே கள்ளக் காதலைக் கண்டித்த இளைஞர், கத்தியால் குத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம், கீழையூர், பிரதாபராமபுரம் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் நாகராஜ் என்ற தங்கராஜ்(28). பிரதாபராமபுரம், தச்சர் தெருவைச் சேர்ந்த நல்லப்பன் மகன் பாலாஜி என்ற பாலச்சந்திரன்(30).

பாலச்சந்திரனுக்கும், தங்கராஜின் உறவினர் பெண்ணுக்குமிடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு பாலச்சந்திரனை அழைத்து தங்கராஜ் கண்டித்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், தங்கராஜை கத்தியால் குத்தியுள்ளார். இதில், பலத்தக் காயமடைந்த தங்கராஜ், சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.