6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளை.யில் வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர், சிறுவன் சாவு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ் (44). மும்பையில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்திருந்த இவர், தனது மனைவி சித்ரா,

News image
Updated On :6 மே 2014, 12:16 pm

முத்துகுமார்

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலையில் நிகழ்ந்த விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர், சிறுவன் இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ் (44). மும்பையில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்திருந்த இவர், தனது மனைவி சித்ரா, மகன் கிருஷ்ணன் ஆகியோருடன் தனது காரில் திருநெல்வேலி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டார். வழிதெரியாமல் பாளையங்கோட்டை மத்திய சிறை வரை சென்ற அவர், பின்னர் அங்கிருந்து திரும்பி தெற்கு புறவழிச்சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல முயன்றாராம்.

அப்போது அவ் வழியாக வந்த அரசு பேருந்தும், காரும் மோதியது. இதில் ஜெயகணேஷ், சித்ரா, கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயகணேஷ் இறந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

சிறுவன் சாவு:

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் மகேஷ் (7). இவர்,  அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் நான்குவழிச்சாலையில் ரெட்டியார்பட்டி நோக்கி செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகேஷ் இறந்தார். இதுகுறித்தும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.