பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த ஆறுமுகநயினார் நிலம் எப்போது விற்பனை ஆகிறதோ அப்போது தருகிறேன் என கூறியுள்ளார். இதுதொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆறுமுகநயினாரின் வீட்டுக்குச் சென்று பணத்தை திரும்பத் தருமாறு உமா நந்தினி கேட்டாராம்.அப்போது, ஆறுமுகநயினார், அவரது மனைவி ராஜலட்சுமி, மகன் ஆறுமுக கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமாநந்தினியை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினராம். இதனால், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல ஐஜி ஆகியோரிடம் உமாநந்தினி புகார் மனு தெரிவித்துள்ளார்.