இது குறித்து ராஜபாளையம்-சிவகாசி ரவுண்ட் டேபிள் 158-ன் தலைவர் கே.ஆர்.கார்த்திகா ராஜா, செயலாளர் ஆர்.காளிராஜ், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரவுண்ட் டேபிள் வாரத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தனித் திறனை வெளிக்கொணர்ந்து ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
போட்டிகள் நவம்பர் 16-ம் தேதி, ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அரங்கத்தில் நடைபெறும். ஓவியப் போட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பேச்சுப் போட்டி 11 மணி முதல் பகல் 1 மணி வரையும் நடைபெறும். மாறுவேடப் போட்டி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். பேச்சுப் போட்டியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசலாம். போட்டியில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இதுபோன்று தனியே முதல் மூன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ மாணவியர் பள்ளியில் தாங்கள் படிக்கும் வகுப்பு குறித்து தலைமை ஆசிரியரிடம் சான்று பெற்று அவரவர் சொந்த செலவில் போட்டிக்கு வர வேண்டும்.
போட்டிக்கான தலைப்புகள்:
1 மற்றும் 2-ம் வகுப்பு: ஓவியப் போட்டி தலைப்பு: விண்வெளி (Space). பேச்சுப் போட்டி தலைப்பு: தூய்மை (cleanliness). மாறுவேடப் போட்டி தலைப்பு: கடல் விலங்குகள் அல்லது காய்கறிகள் (Sea Animals or Vegetables).
3, 4 மற்றும் 5-ம் வகுப்பு: ஓவியப் போட்டி தலைப்பு: பறவைகள் (Birds). பேச்சுப் போட்டி தலைப்பு: பசுமை மயமாதல் அல்லது எரிசக்தி சேமிப்பு (Go Green or Energy Conservation). மாறுவேடப் போட்டி: தனி நபர் அல்லது ஒரு பொருள் சுய சரிதை கூறுதல் (Auto Biography - Person or things).
6 மற்றும் 7-ம் வகுப்பு: ஓவியப் போட்டி: விடுமுறை வேடிக்கை (Holiday Fun). பேச்சுப் போட்டி: இணையதளம் நமது கலாச்சாரத்தைக் கெடுக்கிறதா? (Does internet spoil our culture). மாறுவேடப் போட்டி: சுற்றுச் சூழல் பாதுகாப்பு (Environmental Protection).
8 மற்றும் 9-ம் வகுப்பு: ஓவியப் போட்டி: நிழல் படங்கள் (Images with shadow). பேச்சுப் போட்டி: கல்வி மூலம் சுதந்திரம் (Freedom through Education). மாறுவேடப் போட்டி: கனவு கலைதல் (Dream outs). போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ மாணவியர் தங்களது பெயர்களை 95003-75406, 96775-57958, என்ற எண்களில் எஸ்.எம்.எஸ். மூலமோ, போன் வாயிலாகவோ இம் மாதம் 15-ம் தேதிக்குள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றனர்.