வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ரூ.800 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் தலைமையில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள சென்ட்ரல் திரையரங்கு அருகே புதன்கிழமை காலையில் கூடினர். அங்கிருந்து பேரணியாக சென்ற வங்கி ஊழியர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை வரை சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் பேசும்போது, கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி தொடர்ந்து உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் 5,750 புள்ளிகளை தாண்டிவிட்டது. விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக வங்கி ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
வங்கிக் கிளைகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் ஊழியர்கள் எண்ணிக்கை உயர்த்தவில்லை. பிரதமரால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்கீழ் 7 கோடிக்கும் அதிகமாக புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. பணிச்சுமை அதிகரிப்புக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 350 பெண் ஊழியர்கள் உள்பட 2,100 பேர் பங்கேற்றுள்ளனர். 240 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. ரூ.800 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் எம்.ஜோ சுகுமார், கே.செல்வம், கே.எஸ்.ராஜ்மோகன், ஏ.ஆர்.சந்திரசேகரன், எஸ்.ஏ.ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


