டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திச் செல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து

News image
Updated On :15 நவம்பர் 2014, 2:09 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திச் செல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநகரைச் சேர்ந்தவர் கடற்கரை செட்டியார் மகன் வனமூர்த்தி (50).

இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சரஸ்வதி (48). இவர்கள் தற்போது சேத்தூரில் குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில் 25.6.14-ம் தேதி வனமூர்த்தி, தனது மகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் வெளியில் இருப்பதாயும், யாரும் கேட்டால் தெரியாது என்று சொல்லவும் கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாராம். இதுவரை வனமூர்த்தி வீடு திரும்பாததையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவரை யாரும் கடத்திச் சென்றுள்ளார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.