டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 8 அடி ஆழமுள்ள குழியில் விழுந்த பசு மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் பசு மாடுகள் வளர்த்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் எதிரே மின் வாரியத்தினர் தோண்டிய 8 அடி ஆழமுள்ள குழி

News image
Updated On :19 நவம்பர் 2014, 8:47 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்வாரியத்தினர் தோண்டிய குழியில் புதன்கிழமை விழுந்த பசுவை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் பசு மாடுகள் வளர்த்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் எதிரே மின் வாரியத்தினர் தோண்டிய 8 அடி ஆழமுள்ள குழி மூடப்படாமல் இருந்தது. இதில் இவரது பசு மாடு ஒன்று விழுந்துவிட்டது. சுமார் 2 மணி நேரம் அப் பகுதியில் உள்ளவர்களுடன் இணைந்து மாட்டை மீட்கும் முயற்சியில் முருகன் ஈடுபட்டார். ஆனால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து கயிறு கட்டி பசு மாட்டை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.