டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வத்திராயிருப்பில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்ட திட்டமிட்ட குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் காவல்

News image
Updated On :20 நவம்பர் 2014, 12:05 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் வியாழக்கிழமை திட்டமிட்ட குற்றப் புலனாய்வு போலீஸார் திடீர் சோதனை நடத்தில் ஒருவரைக் கைது செய்து அவரது வீட்டிலிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட திட்டமிட்ட குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் புனிதன், தலைமைக் காவலர்கள் கலைமணி, கணேசன் ஆகியோர் அடங்கிய தனிப் படை வத்திராயிருப்பு, மேலப்பாளையத்தில் உள்ள கருப்பையா (எ) அணைக்கட்டு மகன் சேனைமுத்து (48) என்பவர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியது. அங்கிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார் சேனைமுத்துவைக் கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.