டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவிலி. அருகே கோவிலில் வெங்கல மணி திருடிய இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவிலில் வெண்கல மணிகளைத் திருடிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :21 நவம்பர் 2014, 4:46 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவிலில் வெண்கல மணிகளைத் திருடிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் கோவிலில் திருடப்பட்ட வெண்கல மணிகள் இருந்தன. சுந்தரபாண்டியம் பிள்ளையர் கோவிலில் வெங்கல மணிகளை திருடிக் கொண்டு அவர்கள் வந்தது தெரிவந்தது. மேலும் இருவரும் சுந்தரபாண்டியம், கீழத் தெருவைச் சேர்ந்த சகாயம் மகன் முருகன் (41) மற்றும் சாமுவேல் மகன் சின்னபாட்டன் (48) என்பது தெரிய வந்தது. கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.