ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடிய மூவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடியதாக மூவரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடியதாக மூவரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் இடையேயுள்ள எம்.பி.கே.புதுப்பட்டியில் காப்புக் காட்டை ஒட்டியுள்ள தனியார் தோப்பில் மான் வேட்டையாடப்பட்டுள்ளதாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வன காப்பாளர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச் சரகர் பாண்டியராஜ் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு சுமார் 5 வயதுள்ள ஆண் மான் வேட்டையாடப்பட்டு, கறியை பிரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. வேட்டையில் ஈடுபட்ட துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த பால்ச்சாமி (52), எம்.பி.கே.புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி (45), இடையன்குளத்தைச் சேர்ந்த மௌனகுரு (27) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த மான் தலை மற்றும் வேட்டையாடப் பயன்படுத்தி ஆயுதங்களையும் வனத்துறையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிபதி கவிதா, மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...