கல்லூரி மாணவி கடத்தல்: பெண் எஸ்.எஸ்.ஐ. மகன் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்றதாக கிருஷ்ணன்கோவில் பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்றதாக கிருஷ்ணன்கோவில் பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மஞ்சப்பூத் தெருவைச் சேர்ந்தவர் ராமானுஜம் (56). இவரது 17 வயது மகள் கோயமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமா படித்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டைத் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள். இவர் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் தீபக். இவர் பிராந்திக் கடை பாரில் வேலை செய்து வந்துள்ளார். தீபக்கின் தங்கையும், ராமானுஜனத்தின் 17 வயது மகளும் உடன் படித்தவர்கள். இதற்காக ராமானுஜத்தின் மகள், காசியம்மாள் வீ்ட்டிற்கு போகும் போது தீபக்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமானுஜத்தின் மகளின் தங்க செயினை வாங்கி, தீபக் அடகு வைத்து அவருக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு பேச்சு வார்த்தை நடத்தி, செயினை காசியம்மாள் தரப்பினர் திருப்பி ராமானுஜத்திடம் கொடுக்க வேண்டும் என்று பேசி முடித்துள்ளார்கள்.
இதற்கிடையே, புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த தனது மகளை தீபக், அத்துமீறி வீட்டினுள் நுழைந்து கடத்திச் சென்று விட்டதாக ராமானுஜம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...