டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிளவக்கல் அணை பாசனத்திற்கு திறப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பிளவக்கல் அணையை பாசனத்திற்காக வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் அமைச்சர் கே.டி.

News image
Updated On :27 நவம்பர் 2014, 1:26 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பிளவக்கல் அணையை பாசனத்திற்காக வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

அணையை திறந்து வைத்து அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி, பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெரியார் அணையின் முழு நீர் மட்டம் 204.50 மீட்டர். அதன் முழு கொள்ளளவு 192 மில்லியன் கன அடியாகும். கோவிலார் அணையின் முழு நீர் மட்டம் 212 மீட்டர். அதன் முழு கொள்ளளவு 133 மில்லியன் கன அடியாகும். தற்போது பிளவக்கல் அணையில் 174.15 கன அடியும், கோவிலாறு அணையில் 67.98 கன அடி நீரும் உள்ளது. பிளவக்கல் அணைக்கு வினாடிக்கு 20.08 கன அடி நீரும், கோவிலாறு அணைக்கு 0.08 கன அடி நீரும் வந்து கொண்டுள்ளது.

பிளவக்கல் அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து, இரு அணைகள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ நீர் இருப்பைப் பொருத்து வினாடிக்கு 150 கன அடி வீதம் கண்மாய் பாசனத்திற்கும், பிளவக்கல் அணையிலிருந்து வினாடிக்கு 3 கன அடி வீதம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் பயனாக வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கான்சாபுரம், கொடிக்குளம் பகுதிகளில் உள்ள பூரிப்பாறைக்குளம், சீவனேரி கண்மாய், குணவந்தனேரி கண்மாய், கொடிக்குளம், பெத்தான்குளம், புங்கன்குளம், வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய் ஆகிய 8 கண்மாய்கள் மூலம் 1167.85 ஹெக்டேர் நிலங்கள் மற்றும் நேரடி கால்வாய் பாசனம் மூலம் 174.69 ஹெக்டேர் நிலங்களும் ஆகமொத்தம் 1342.54 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு விவசாய பெருமக்கள் அதிக மகசூல் பெறும் நோக்கத்துடன் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மயில்சாமி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கனகுஅம்மாள், காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.