எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணப்பாறை அருகே வெறிநாய் கடித்து பள்ளி மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே வெறிநாய் கடித்து 2 பள்ளி மாணவர்கள் உட்பட 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

News image
Updated On :28 நவம்பர் 2014, 1:50 pm

கிருஷ்ணமூர்த்தி

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே வெறிநாய் கடித்து 2 பள்ளி மாணவர்கள் உட்பட 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள முத்தாழ்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கோட்டைபளுவஞ்சி. இந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலையில் சாலையில் நடந்து  சென்ற மலையாண்டி வயது (70) என்பவரை வெறி நாய் கடித்து குதறியது. இதில் வலி தாங்க முடியாமல் மலையாண்டி கதறியதை அடுத்து அருகிலிருந்தவர்கள் வந்து நாயை விரட்ட முயன்றனர். ஆனால் அந்த நாய் விரட்ட வந்த அனைவரையும் கடிக்க முயன்றது.

இதனால் அதிர்ச்சியடைந்து அனைவரும் ஓட்டம் பிடித்த நிலையில் விரட்டி சென்ற நாய் பூபதி வயது 28, சின்னுக்கோனார் வயது 65 ஆகிய இருவரையும் கடித்து குதறியது. பின்பு அந்த வழியில் ஓடிய வெறிநாய் அருகிலிருந்த சிட்டுக்குருவி நாயக்கன்பட்டியை சேர்ந்த ரெங்கம்மாள் (வயது60), பள்ளி மாணவர்கள் நடராஜ் (வயது11), சந்திரசேகர்(வயது13) ஆகியோரை கடித்து குதறி பின்பு அருகிலுள்ள கார்வாடியைச் சேர்ந்த சரண்யா (வயது20), மூக்கன் (வயது40), சின்னப்பன் (வயது50), காவல்காரன்பட்டியை சேர்ந்த செல்வி (வயது36) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது.

வெறிநாய் கடித்த அனைவரும் பலத்த காயங்களுடன் சுக்காம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயம் பலமாக இருந்ததால் மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வெறிநாய் கடித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தப்பி ஓடிய வெறிநாயை தேடிய போது அது  பண்ணாங்கொம்பு அருகே அலைந்து கொண்டிருந்தது. அந்த வெறி நாயை அடித்து கொன்று உடனே தீ வைத்து எரித்தனர். இந்த வெறிநாய் கடி சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.