கலசலிங்கம் பல்கலைகழகத்தில் கணிதத்தில் வரைபடக்குறியீடு குறித்த பன்னாட்டுப் பயிற்சி கருத்தரங்கு
கணிதத்தில் வரைபடக்குறியீடு குறித்த பன்னாட்டுப் பயிற்சி கருத்தரங்கு இரண்டாம் முறையாக இந்தியாவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.


கணிதத்தில் வரைபடக்குறியீடு குறித்த பன்னாட்டுப் பயிற்சி கருத்தரங்கு இரண்டாம் முறையாக இந்தியாவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து பல்கலைக் கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரைபடக்குறியீடு பன்னாட்டுப் பயிற்சி கருத்தரங்கு (IWOGL-2014) விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் தேசியத் தனிக்கணித மேம்பாட்டாய்வு நிலையம் சார்பில் டிசம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் புதுதில்லி தேசிய அறிவியல் கழகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் நடைபெறும் இந்த பன்னாட்டுப் பயிற்சி பட்டறையின் ஆய்வுக் கோவையானது எல்ஸ்வியர் நிறுவனத்தின் தனிக்கணிதத்தில் மின்னணு குறிப்பு (Electronic Notes in Discrete Mathematics) என்ற ஆய்விதழின் சிறப்பு வெளியீடாக வெளியிடப்படும்.
உலகளவில் இரண்டாவது முறையாக இப்பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தும் ஒரே பல்கலைக்கழகம் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மட்டுமே. முதல் கருத்தரங்கு 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி இங்கு நடைபெற்றது. இப்பன்னாட்டு பயிற்சி கருத்தரங்கு துறைசார் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதப்படுத்தும் வகையில் நடைபெறும் ஒரு தொடர் நிகழ்வாகும். வரைபடக்குறியீடு, பல்வேறு வகை மாதிரிகள் மற்றும் செயல்பாடு பயன்கள் என்பதுவே இப் பயிற்சி கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். குறியீட்டு கோட்பாடு, எக்ஸ் கதிர் படிகவியல், ரேடார், வானியல், சுற்றுவடிவமைப்பியல், தகவல் தொடர்பு வலைப்பின்னல் தரவுதள மேலாண்மை போன்ற துறைகளில் இவ்வரைபட குறியீடு பயன்பாடு சுவாரசியமானதானதாகும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், சுலோவாகியா, தைவான், இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைசிறந்த துறைசார் வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சி கருத்தரங்கில் உரையாற்றுகிறார்கள்.இளம் ஆய்வர்கள் துறைசார் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளவும், உரையாடவும் வாய்பளிக்கும் வகையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், கருத்துரைகள் போன்றவைகள் முடிந்தவுடன், வல்லுநர்களுடன் கருத்துப் பரிமாற்றத்திற்கும் தொடர்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் துறைசார் சிறந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பது இப் பயிற்சி பட்டறையின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.
இது இளம் ஆய்வர்கள் தங்களுடைய துறை அறிவை மேம்படுத்த உதவியாக இருக்கும். மேலும் இப்பட்டறை கூடுமானவரை தத்துவார்த்தக் கருத்தையும் பயன்பாட்டையும் கவனம் கொள்ளச் செய்யும். மேலும் வருங்கால ஆய்வாளர்கள் இந்தியாவில் ஆய்வுக்காக நிதி வழங்கி வரும் பல்வேறு நிறுவனங்களிடம் ஆய்வு முன்வரைவு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் பெறும் வகையிலும் இப் பன்னாட்டுப் பயிற்சி கருத்தரங்கு அமையும் என்றார் அவர். அப்போது தனிக்கணித மேம்பாட்டு ஆய்வு நிலையத்தின் டீன் டாக்டர் ஆறுமுகம் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...