நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் ரோப் கார் இயக்கம் ஒரு மணி நேரம் நிறுத்தம்

பழனி மலைக்கோயில் ரோப்கார் சிக்னல் பழுது தொடர்பாக ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2014, 9:23 am

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயில் ரோப்கார் சிக்னல் பழுது தொடர்பாக ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டது.

பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் இருநிமிட அவகாசத்தில் மலை உச்சியை அடையும் வகையில் இயக்கப்பட்ட ரோப்கார் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த ரோப்கார் தினமும் ஒரு நிமிடமும், மாதம் ஒருநாளும் பராமரிப்புக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் ஒன்றரை மாதம் வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  பராமரிப்புப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு திங்கள்கிழமை முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை ரோப்கார் இயக்கத்தின் போது சிக்னல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.  இதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டு பழுது சரிசெய்யப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை விஜயதசமி என்பதால் மதியம் 1.30 மணிக்கு மலைக்கோயில் சன்னதி நடை அடைக்கப்பட்டதால் ரோப்கார் பழுது காரணமாக பக்தர்கள் பலரும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.