இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மருத்துவர் செல்லோடேப்பால் முகம் முழுவதும் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை அடுத்து, அண்டைவீட்டார், நம்பர் ஒன் டோல்கேட் காவல்நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து சோதனை செய்து பார்த்ததில், மருத்துவரின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலி, கை வளையல்கள், வீட்டில் இருந்த பீரோ பொருள்கள் ஆகியவை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு தெரியவில்லை என்று போலீஸார் கூறினர்.