கனமூர் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்: ராகி, நெல், சாமை பயிர்கள் சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகளால் 10- ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெல், சாமை, ராகி பயிர்கள் சேதம் அடைந்தன.


கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகளால் 10- ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெல், சாமை, ராகி பயிர்கள் சேதம் அடைந்தன.
ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை காப்புக் காட்டில் கடந்த ஓராண்டாக முகாமிட்டுள்ள காட்டு யானை அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் இந்த யானைகள் மனிதர்களையும் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நிலையில் கடந்த சில நாள்களாக வனப் பகுதியிலிருந்து வெளியே சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.
பர்கூர் அருகே உள்ல ஒப்பந்தவாடி ஊராட்சிக்கு உள்பட்ட கனமூர் கிராமத்தினர் அங்குள்ள வனப் பகுதியின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பரப்பளவில் தக்காளி, சாமந்தி பூ, நெல், சாமை, ராகி போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது மிதமான நிலையில் மழை பெய்துள்ள நிலையில், பயிர்கள் நன்கு விளைந்துள்ளன.
இந்த நிலையில், நேரலக்கோட்டை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் கனமூர் கிராமத்தினர் சாகுபடி செய்திருந்து 15-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பயிர்களை சேதப்படுத்தின. இதில் விவசாயிகளான அதிமன்னனின் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள ராகி பயிர்களும், சிவக்குமாரின் நெல் பயிர்களும், கோவிந்த சாமியின் சாமை பயிர்களும், கன்னியப்பனின் 3.5 ஏக்கர் பரப்பளவுள்ள நெல்பயிர்களும் சேதம் அடைந்தனர்.
காட்டு யானைகளால் பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகள் மீண்டும் கிராத்திற்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
யானைகளை தடுத்து நிறுத்தும் ஆந்திர மாநில வனத் துறையினர்:
ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறி கிருஷ்ணகிரி வனப் பகுதியில் கடந்த ஓராண்டாக முகாமிட்டுள்ள யானைகளை தமிழ்நாடு வனத் துறையினர் ஆந்திர மாநிலத்துக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், இந்த யானைகளை ஆந்திர மாநிலத்துக்குள் நுழைய விடாமல் ஆந்திர மாநில வனத் துறையிநர் தடுத்து நிறுவத்துவதாகவும், இதனால், இந்த யானைகள் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து இருப்பதாகவும், ஆந்திர மாநில வனத்துறையினரின் செயல்பாட்டால் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும், ஆந்திர மாநில எல்லையானது அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதிக்கு உள்பட்ட பகுதியாக இருப்பதால் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறும் யானைகளால் அந்த மாநில மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் ஆந்திர மாநில வனத் துறையினர் செயல்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...