இலங்கை நபர் கொலை வழக்கில் 4 பேர் கைது: ஒருவர் தலைமறைவு
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (56). கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டருகிலேயே கொலைசெய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் போலீஸ் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில்


திருச்சியில் நடைபெற்ற இலங்கை நபர் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (56). கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டருகிலேயே கொலைசெய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் போலீஸ் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த (இலங்கையைச் சேர்ந்தவர்) ராகவன் என்பவருக்கு கொலையில் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ராகவன், அவரது உறவினர் குமரன், இமாம்அலி, கல்லுக்குழியைச் சேர்ந்த ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...