மாநில அரசின் பலவீனத்தை மூடிமறைக்கும் ஆளுநர் உரை: மார்க்சிஸ்ட் புகார்
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 8-ல் மாநில துணைநிலை ஆளுநர் உரையோடு துவங்கியுள்ளது. ஆளுநர் உரையில் மாநில அரசின் கொள்கை திசைவழி இல்லை. மாறாக நடைப்பெற்றப்


புதுவை மாநில அரசின் பலவீனத்தை மூடிமறைக்கும் வகையில் ஆளுநர் உரை உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கூறியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 8-ல் மாநில துணைநிலை ஆளுநர் உரையோடு துவங்கியுள்ளது. ஆளுநர் உரையில் மாநில அரசின் கொள்கை திசைவழி இல்லை. மாறாக நடைப்பெற்றப் பணிகளின் தொகுப்பாகவும், அரசின் பலவீனத்தை மூடிமறைப்பதுமாகவே உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் திட்ட ஒதுக்கீடு ரூ.2000 கோடியில் ரூ.1665 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. ரூ.335கோடி செலவு செய்யப்படவில்லை. ஆனாலும் மாநில அரசின் திட்ட செலவீனத்தை சாதனையாக ஆளுநர் உரை குறிப்பிடுகிறது.
நடப்பு நிதியாண்டிற்கு ரூ.2400 கோடி திட்ட ஒதுக்கீடு உயர்ந்துள்ளதற்கு மாநில அரசின் நிதி ஆதரங்களில் உயர்வும் மத்திய அரசின் கூடுதல் திட்டங்களுமாகும் என்று ஆளுநர் உரை குறிப்பிடுகிறது. மேலும் மாநில அரசின் ரூ.6300 கோடி கடன் ரத்து குறித்தும், மத்திய அரசின் கூடுதல் நன்கொடை (அ) மானிய உயர்வு குறித்தும் எந்த அறிகுறியும் தென்படவில்லை.புதுச்சேரி மாநிலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012-2013 ஆம் ஆண்டை காட்டிலும் 2013-2014ல் 25.59 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும்,தனிநபர் வருமானம் 2013-14ல் ரூ.1,58,630 ஆக உயர்ந்துள்ளதாக அதாவது 22.5 சதவிதம் உயர்வு என்றும் குறிப்பிடுகிறது. மாநிலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. புதிய தொழில்கள் துவங்கப்படவில்லை விவசாயம் நட்ட தொழிலாக மாறியுள்ளதால் விவசாய விளைநிலப் பரப்பும் ,உற்பத்தியும் குறைந்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100நாள் வேலைத்திட்டம் சராசரி 25 நாட்களுக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. மதிப்புக்கூட்டிய வரி உயர்வால் வணிகமும், அதைச்சார்ந்த முறைசார தொழிலாளர்களுக்கு வேலையும்,வருமானமும் குறைந்துள்ளன. சமூகப் பொருளாதாரம் வலுவிழந்து, வாழ்க்கை நெருக்கடிகள் அதிகரித்து புதுச்சேரி மாநிலம் தற்கொலையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளன.
தொழிற்சாலைகள் குறைந்துள்ள நிலையில் உற்பத்தி வரி எவ்வாறு உயர்ந்துள்ளது என்ற ரகசியத்தை மாநில அரசு தெளிவுப்படுத்த வேண்டும். புதுச்சேரி மக்கள் தொகையில் 22.4 சதவிதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக 2004-2005 ஆம் ஆண்டு மத்திய திட்டக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் மாநில துனைநிலை ஆளுநர் உரையில் 2013-14ல் அதாவது 10 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் ரு.1,58,630 உயர்ந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இதன் முலம் மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் வறுமை நிலை குறைந்துள்ளது என ஆளுநர் உரையில் கூறுவது ஏற்புடையதல்ல.மாநில அரசின் பலவீனத்தை மூடிமறைக்கும் முயற்சியாகவே துணைநிலை ஆளுநர் உரை அமைந்துள்ளது என்றார் பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...