நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி ரோப்கார் பராமரிப்புப் பணிகள் தீவிரம்: ரூ.6 லட்சம் மதிப்புள்ள சாப்ட், வீல்கள் மாற்றம்

தமிழகத்தின் முதன்மைக் கோயிலாக விளங்குவது பழனிக்கோயிலாகும்.  பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய மலை உச்சியை  இரண்டு நிமிட நேரத்தில் பக்தர்கள்

News image
Updated On :11 செப்டம்பர் 2014, 1:13 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயில் ரோப்கார் ஒருமாத பராமரிப்பு முன்னிட்டு தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீர்செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலாக விளங்குவது பழனிக்கோயிலாகும்.  பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய மலை உச்சியை  இரண்டு நிமிட நேரத்தில் பக்தர்கள் சென்றடையும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு அமைக்கப்பட்ட ரோப்கார் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரோப்கார் தினமும் ஒரு மணி நேரமும், மாதம் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.  இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ரோப்கார் நிறுத்தத்தால் தற்போது மூன்று வழிகளில் வின்ச் மட்டுமே பக்தர்கள் பயன்படுத்தி வருவதால் வின்ச் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த நாட்களில் ரோப்காரின் பெட்டிகள், பேரிங்குகள், சாப்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உதிரி பாகங்கள் கழற்றி சீர் செய்யப்பட்டு வருகிறது.  பழுதடைந்த உதிரிபாகங்கள் உடனடியாக மாற்றப்பட்டும் வருகிறது.  கடந்த முறை மலைக்கோயில் மேலே இருந்த சுமார் 400கிலோ எடையுள்ள சாப்ட் மாற்றப்பட்டது.  இந்நிலையில் தற்போது மலைக்கோயில் மேல்தளத்தில் உள்ள சாப்ட், கீழ் தளத்தில் உள்ள சாப்ட், சக்கரங்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.  இதற்காக வியாழக்கிழமை கல்கத்தாவில் இருந்து சுமார் 800 கிலோ எடையுள்ள இரண்டு சாப்ட்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை இணைக்கும் பணி பொறியாளர் சுதீப்மண்டல் தலைமையில் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்க நடைபெற்று வருகிறது.  வரும் நாட்களில் மலைக்கோயில் மேலே உள்ள தளத்தில் சிறிய சக்கரங்கள் முதல் பெரிய சக்கரங்கள் வரை அனைத்தும் கழற்றி பேரிங் மாற்றப்பட்டு வடக்கயிற்றில் இணைக்கப்பட்டும். 

மலைப்பாதையில் உள்ள சுமார் 75 அடி உயர டவரில் உள்ள சக்கரங்கள் அனைத்தும் கழற்றி புதிய புஷ்கள் மாற்றப்பட்டது.  ரோப்கார் பெட்டிகள் சீரமைக்கப்பட்டு, புதியவர்ணம் பூசப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவு பெற்று பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ரோப்கார் கேபின்களின் இருக்கைகளுக்கு புதிதாக குஷன்கள் அமைக்கப்பட்டு வருகிறது.  ரோப்கார் பணிகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.