மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆலங்குடி அருகே பள்ளியின் ஜன்னலை உடைத்து கணினி திருட்டு

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஆசிரியர்கள்  வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மாலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.வார விடுமுறை நாட்களான

News image
Updated On :15 செப்டம்பர் 2014, 9:37 am

பார்திபன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளியின் ஜன்னலை உடைத்து கணினியை  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஆசிரியர்கள்  வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மாலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.வார விடுமுறை நாட்களான இரு தினங்கள் பள்ளி பூட்டியிறுந்த நிலையில் திங்கள்கிழமை காலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை அன்புச்செல்வி பள்ளியை திறந்து பார்த்தபோது கட்டடத்தின் பின்புறமுள்ள சிமெண்டினால் ஆன (கிராதி) ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கணினி திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை அன்புச்செல்வி அளித்த புகாரையடுத்து காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் வழக்குப் பதிந்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.