சீட்டாட்டம். ரூ.1.17 லட்சம் பறிமுதல்
பழனியில் கடந்த இருநாட்களாக போலீஸார் மூன்று குழுவாக பிரிந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள், விடுதிகள், மடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பழனி டவுன் காவல்துறை


பழனியில் போலீஸார் சோதனையின் போது சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனியில் கடந்த இருநாட்களாக போலீஸார் மூன்று குழுவாக பிரிந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள், விடுதிகள், மடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பழனி டவுன் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் போலீஸôர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அடிவாரம் பகுதியில் தனியார் விடுதி அருகே புதுதாராபுரம் ரோட்டை சேர்ந்த அருணாசலம் மகன் நடராஜ்(48), விருப்பாட்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சுந்தரராஜன்(49), மொல்லம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கனகராஜ்(50) மற்றும் கவுண்டன்குளத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் கண்ணன்(50) ஆகியோர் பணம் வைத்து 52 சீட்டு உள்ளே, வெளியே ஜெயிக்குது, தோக்குது என விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 275ஐ பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...