ஓய்வுபெற்ற எஸ்ஐ உள்ளிட்ட இருவர் மீது மோசடி வழக்குப் பதிவு
பழனி பட்டத்துவினாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆவார். அதே பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர்கள் இருவரும் சேர்ந்து பழனியை


பழனியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., உள்ளிட்ட இருவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி பட்டத்துவினாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆவார். அதே பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர்கள் இருவரும் சேர்ந்து பழனியை அடுத்த கணக்கன்பட்டி ராஜாபுரம் புதூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் செல்லமுத்து என்பவரிடம் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளனர். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பாக்கி பணம் ரூ.10,50,000 ஐ தராமல் இருவரும் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சனிக்கிழமை பழனி டவுன் ஆய்வாளர் புகழேந்தி பெரியசாமி, உமாமகேஸ்வரி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...