மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு

ஆலங்குடி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சனிக்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.  

News image
Updated On :27 செப்டம்பர் 2014, 7:54 am

பார்திபன்

ஆலங்குடி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சனிக்கிழமை இளைஞர் உயிரிழந்தார். 

ஆலங்குடி தைகால் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் ராவுத்தர் கனி (34).இவர் சனிக்கிழமை அதிகாலை பட்டுக்கோட்டை செல்வதற்காக ஆலங்குடியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.அப்போது  மாங்காடு பூச்சிகடை அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம்  மீது எதிர்பாராத விதமாக ராவுத்தர் கனியின் மோட்டார் சைக்கிள் மோதியது.இதனால் படு காயமடைந்த ராவுத்தர் கனி சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த வடகாடு போலீஸார்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர்  வேலூர் மாவட்டம் வடுவன்தாங்கலைச் சேர்ந்த அப்புனி மகன் முனுசாமி (40)-யை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.