/

சத்தியமூர்த்தி பவனில் நாளை மறுநாள் காமராஜர் சிலை திறப்பு பி.எஸ்.ஞானதேசிகன் அழைப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் திறக்கப்பட உள்ளன.இந்த விழாவில் பங்கேற்க வருமாறு

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:53 am

அரவிந்தன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் திறக்கப்பட உள்ளன.இந்த விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸாருக்கு அக் கட்சியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலையும், சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தியின் மார்பளவு வெண்கலச் சிலையும் சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ளது.அதன் திறப்பு விழா அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைப் போல சத்தியமூர்த்தி பவனில் புதுப்பிக்கப்பட்ட ஓர் அரங்கத்துக்கு ராஜீவ்காந்தி பெயர் சூட்டும் விழாவும் நடைபெற உள்ளது.காங்கிரஸ் வரலாற்றில் இந்த விழா ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என விரும்புகிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றாலும்கூட, அந்த இயக்கத்தின் தொண்டர்கள் என்றும் துவள மாட்டார்கள் என்று காட்டிட இந்த விழா பயன்படும். விழா சிறப்புடன் நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வேண்டுகிறேன். காங்கிரஸார் அனைவரும் திரண்டு வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.