நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது

பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர ஏதுவாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரோப்காரை மாதம் ஒருமுறை ஒரு நாளும், வருடத்துக்கு ஒருமுறை ஒருமாதமும்

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 11:10 am

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயில் ரோப்கார் திங்கள்கிழமை முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர ஏதுவாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரோப்காரை மாதம் ஒருமுறை ஒரு நாளும், வருடத்துக்கு ஒருமுறை ஒருமாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பாக ரோப்கார் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  ரோப்கார் தளங்களில் சுமார் ஆறு லட்சம் மதிப்பில் புதிய சாப்டுகள், வீல்கள் கல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மாற்றப்பட்டது.  மேலும், ரப்பர் புஷ்கள், பேரிங்குகள் மாற்றப்பட்டது.  ரோப்கார் பெட்டிகளுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சோதனை எடை ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை சோதனை ஓட்டம் குறித்த ஆய்வை அதிகாரிகள் மேற்கொண்டு இயக்கம் திருப்திகரமாக இருந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது. இன்று ரோப்கார் பெட்டிகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.  நிகழ்ச்சியில் திருக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.