கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் இலங்கை அதிபரை கண்டித்து தமாகாவினர் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என கூறிய அதிபர் சிறிசேனாவை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, மூப்பனார்

News image
Updated On :3 ஏப்ரல் 2015, 2:50 pm

ஜி.சுந்தரராஜன்

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என கூறிய அதிபர் சிறிசேனாவை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, மூப்பனார்
பேரவை மற்றும் ஜி.கே.வாசன் நற்பணி மன்றம் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார். மூப்பனார் பேரவை நிறுவனரும், பொதுச்செயலாளருமான ஜெமினி எம்.என்.ராதா, நகர இளைஞரணி தலைவர் ராஜாசம்பத்குமார், நிர்வாகிகள் ஆர்.சம்பந்தமூர்த்தி, ஜி.ஆறுமுகம், ஆட்டோ டி.குமார், ஆர்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாசன் நற்பணி இயக்க பொதுச்செயலாளர் எஸ்.முத்துக்குமார் வரவேற்று பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் தமாகா மற்றும் மூப்பனார் பேரவை, வாசன் பேரவை நிர்வாகிகள் எம்.கே.பாலா, துரைமுருகன், சுப்புலட்சுமி, ருக்குமணி, பி.செல்வக்குமார், எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர துணைத் தலைவர் என்.இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.