கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்நாடக அரசு பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 36 விவசாயிகள் கைது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்ற 36 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்ற 36 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைகள் கட்ட கர்நாடகம் அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. இதனை கண்டித்தும், தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சனிக்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நகல் எரிப்பு போராட்டத்திற்காக கூடினார்கள். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், போராட்டத்திற்காக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன், செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் உள்ளிட்ட 6 விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது விவசாயிகளின் வருகையை எதிர்பார்த்திருந்த போலிஸார் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனவே உங்களை கைது செய்கிறோம் என கூறி அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர், பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்த 5 விவசாயிகளை அதேபோல் கைது செய்தனர். இப்படி
தொடர்ந்து விவசாயிகள் 36 பேரை கைது செய்தனர். ஒன்று கூடவே விடாமல் போலிஸார் நடந்து கொண்டது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் வந்த உடனேயே அவர்களின் கையில் உள்ள துணிப்பை, லெதர் கைப்பபை உள்ளிட்டவைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...