கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் சாவு: ஒருவர் காயம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2015, 2:04 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அகரகோட்டாளம் பகுதியைச் சேர்ந்த அருள்ஆனந்த் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயிலுகிறார். அதே பகுதியைச் சேர்ந்த டேவின் ஜான்சன் (21). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு பயிலுகிறார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மேரிஜூலியன் பண்டிட் (24). மேற்கண்ட மூவரும் வெள்ளிக்கிழமை புனிதவெள்ளியை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணிக்கு சென்றனர். அங்கு சென்று பிராத்தனையை முடித்துவிட்டு சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் திரும்பியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை அருள் ஆனந்த் ஓட்டி வந்துள்ளார். அப்போது சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமம் அருகே வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருள்ஆனந்த் (20), டேவிட்ஜான்சன் (21) ஆகிய இருவரும் இறந்தனர்.மேரிஜூலியன் பண்டிட் (24) படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.