கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்நாடக அரசு பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 36 விவசாயிகள் கைது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்ற 36 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :4 ஏப்ரல் 2015, 12:40 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்ற 36 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைகள் கட்ட கர்நாடகம் அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. இதனை கண்டித்தும், தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சனிக்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நகல் எரிப்பு போராட்டத்திற்காக கூடினார்கள்.  போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், போராட்டத்திற்காக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன், செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் உள்ளிட்ட 6 விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது விவசாயிகளின் வருகையை எதிர்பார்த்திருந்த போலிஸார் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனவே உங்களை கைது செய்கிறோம் என கூறி அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர், பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்த 5 விவசாயிகளை அதேபோல் கைது செய்தனர். இப்படி

தொடர்ந்து விவசாயிகள் 36 பேரை கைது செய்தனர். ஒன்று கூடவே விடாமல் போலிஸார் நடந்து கொண்டது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் வந்த உடனேயே அவர்களின் கையில் உள்ள துணிப்பை, லெதர் கைப்பபை உள்ளிட்டவைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.