தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 3 பேர் திருச்சி வந்தனர்

ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :6 ஏப்ரல் 2015, 7:51 am

கவியழகன்

ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியிருக்கும் 4,000 இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில்  20 தமிழர்கள் உள்ளிட்ட 452 பேர் மீட்கப்பட்டு இன்று அதிகாலை மும்பை மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த 3 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றனர். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) கருமண்டபத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், திருச்சி வயலூரை சேர்ந்த கணேஷமூர்த்தி ஆகியோர் திருச்சி வந்தடைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஏமனில் பவர் கம்பெனியில் பணியாற்றியதாகவும் அங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் அங்கிருந்து படகு மூலம் ஏடானுக்கு சென்று பின்னர் இந்திய கடற்படை கப்பல் மூலம் மும்பை வந்து அங்கிருந்து சென்னை சென்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்ததாக கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.